தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தமிழகத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவிகள் 4.93% மாணவர்களை விட அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

இந்த மாவட்டத்தில் 97.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு திருப்பூர் மாவட்டம் (97.79%) இரண்டாம் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் (97.59%) மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை 94.14 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.