சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 74040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 9130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 3 நாட்களில் தங்கம் விலை 1360 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 9960 ரூபாய்க்கும், ஒரு சவரன் 79680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.