விண்ணில் பாய்ந்த PSLV-C60 ராக்கெட். ஸ்பேஸ் டாக்கிங் சிஸ்டம் சோதனை செய்வதற்கான ஸ்பேடக்ஸ் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்பேடெஸ் திட்டத்தின் பயன்பாடு குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, இஸ்ரோவின் சாதனையில் புதிய மைல்கல்.

ஸ்பேஸ் டாக்கிங் சோதனை வெற்றியின் மூலம் உலகிலேயே இந்த செயல்முறையை தொடங்கிய நான்காவது நாடாக இந்தியா திகழும். மனிதனை விண்ணுக்கு அனுப்புவது, விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தை நிறுவுவது, தரவுகளை சேகரிப்பது, சந்திராயன் 4 திட்டம் உள்ளிட்ட எதிர்கால திட்டங்களுக்கு இது அடிப்படை சோதனையாக விளங்கும் என கூறியுள்ளார்.