
சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நீலாங்கரை, அடையாறு, திருவான்மியூர், சேப்பாக்கம், ராயபுரம், பாரிமுனை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் Torrent Gas நிறுவனத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.