விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு மொத்தம் ரூபாய் 1,500 கோடி வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு 1500 கோடி வட்டி இல்லா கூட்டுறவு கடன் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2023 -24 ஆம் நிதி ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் தரப்பட உள்ளது. வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகளை அணுகி கடன் பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார். கால்நடை, மீன் வளர்ப்பு, அவை சார்ந்த தொழிலுக்கு வட்டி இல்லா நடைமுறை மூலதன கடன்களுக்கு ரூபாய் 1500 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்படுகின்றன..