நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவான 118 அடியை எட்டியது.

மணிமுத்தாறு அணையில் இருந்து 2000 கன அடிவரை உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மிக முக்கிய அணையான நெல்லை மாவட்டத்தின் மணிமுத்தாறு அணையானது முழு கொள்ளளவான 118 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின்  நீர்வரத்தானது உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுவரை அணை 2 தினங்களாக மூடப்பட்டிருந்த நிலையில். தற்போது தாமிரபரணி நதியில் வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த அணை திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 1300 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மணிமுத்தாறு அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மணிமுத்தாறு முழு கொள்ளளவான 118 அடியை எட்டுவதால் 2000 கன அடி உபரி நீர் திறக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். வெள்ள அபாயம் இல்லாவிட்டாலும் மக்கள் கவனமுடன் இருக்க நெல்லை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்..