தமிழக அரசு துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் புடவை அல்லது துப்பட்டாவுடன் கூடிய சல்வார், கமீஸ் சுடிதார் போன்ற உடைகளை அணிந்து கொள்வதற்கு அனுமதி இருக்கிறது. இதே போல ஆண் ஆசிரியர்கள் வேஷ்டி, சட்டை மற்றும் பார்மல் பேண்ட் சட்டை அணிந்திருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண் ஆசிரியர்கள் சுடிதார் அணிவதற்கு அனுமதி உள்ள நிலையிலும் தலைமை ஆசிரியர்கள் பலரும் இதற்கு அனுமதி அளிப்பதில்லை.

இதனால் அசௌகரியமாக இருப்பதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு பள்ளி ஆசிரியர்கள் புடவை அல்லது சல்வார், கம்மீஸ் அணிந்து கொள்வதற்கு அரசின் உத்தரவில் அனுமதி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இந்த அறிவிப்பானது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இந்த உத்தரவு தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பொருந்துமா என்ற கேள்வியும் இழந்துள்ளது. இது குறித்த பதில் விரைவில் அரசு தரப்பில் இருந்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.