
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதி சுற்றிக்கு முன்னேறிய நிலையில் அவர் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதாவது நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அவர் 100 கிராம் அதிகமாக இருந்ததால் அவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரிடம் அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவிய வீராங்கனை தற்போது இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு இந்திய தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சர்வதேச மல்யுத்த சங்கத்தின் தலைவர் நேனட் லாவோவிக் பேட்டி கொடுத்துள்ளார். அவர் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செல்லுபடி ஆகும். அவர் ஒருவருக்காக விதிகளை மாற்ற முடியாது. மேலும் விதிகள் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி தான் என்று கூறினார்.