தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதிகள் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அடுத்ததாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.

அவர் தற்போது 1,18,567 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்துவிட்டார். அதன் பிறகு பாமக வேட்பாளர் 53,442  வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 10,009 வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர். மேலும் இதன் மூலம் தற்போது அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.