
விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து திமுக முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 40000 வாக்குகள் வித்யாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். மேலும் அவர் வெற்றி பெறும் நிலையில் இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி அந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்.