
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டகை, சூரல் மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் தற்போது 43 ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும் ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற இருக்கிறது.