இந்திய ரிசர்வ் வங்கி தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் குறைத்துள்ளது. ஏற்கனவே தலா இரு முறை 0.25 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் மாதங்களைத் தொடர்ந்து ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதால் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி குறையும். மேலும் அதே நேரத்தில் வீடு மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதமும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.