
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக வலுப்பெற்ற நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் வட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி மற்றும் தமிழகம் நோக்கி நகரக்கூடும் என்பதால் இன்னும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களுக்கு அதிக கன மழை காண ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோட பல்வேறு மாவட்டங்களில் கனமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கி ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.