வெள்ள நிவாரண பணத்தை ரொக்கமாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

நிவாரண தொகை 6 ஆயிரம் ரூபாயை  வங்கி கணக்கில் செலுத்தக்கோரிய வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. வெள்ள நிவாரணம் உடனடியாக தேவை அதை, தாமதப்படுத்துவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிவாரணம் தகுதியானோருக்கு செல்வதை உறுதி செய்யவும் நிவாரணம் வழங்கியது குறித்து அறிக்கை தரவும் ஆணையிடப்பட்டுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் ரூபாய் 6000 வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 4 மாவட்டங்களில் 37 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்குகளின் விசாரணை ஜனவரி 5 ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிவாரணத்தை ரொக்கமாக வழங்கினால் தவறானவர்கள் பயனடைவார்கள் என மனுதாரர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.