தமிழகத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணினி உதவியாளர்களுக்கு தொகுப்பூதியம் 16 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வரை மாதம் 14 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்ட நிலையில் மார்ச் மாதத்தில் இருந்து 16,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தொகுப்பூதியத்தை 4000 ரூபாய் உயர்த்தி 20,000 ரூபாயாக வழங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.