ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற முத்தரவு பிறப்பித்துள்ளது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக தேன்மொழி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது.

அனுமதி உள்ள இடத்தில் போராட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள். ரிப்பன் மாளிகைக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க மாநகர காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.