போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொய் புகார் கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் கணவர் வேலைக்கு செல்லாமல் இருப்பதை தட்டிக்கேட்ட மாமனார் மீது மருமகள் பொய்யாக புகார் அளித்தார். அந்த இளம்பெண் தனது குழந்தைக்கு மாமனார் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

விசாரணையில் கணவரின் பேச்சை கேட்டு பொய் புகார் அளித்தது தெரியவந்தது. இதனால் பொய் புகார் அளித்த மருமகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. பொய்யாக பாலியல் வன்கொடுமை புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.