
பாஜக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த திரு.K.R வெங்கடேஷ் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு கலங்கம் விளைவுக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாலும் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார்.
ஆகவே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கே ஆர் வெங்கடேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.