தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் மாதத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. மே மாதத்தில் பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கு ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள உணவுப் பொருள் வழங்கல் துறை, தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பொருட்களைக் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதால் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.