மூத்த காங்கிரஸ் தலைவரும், நாந்தேட் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்தராவ் சவான் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 26) இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 70. ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.

கடந்த இரண்டு வாரங்களாக அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். அவருக்கு கல்லீரல் தொற்று ஏற்பட்டதையடுத்து, நாந்தேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமமும் இருந்தது. அவருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருந்தது. இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையில் இருந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

“>