பஞ்சாபை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்தேவ் சிங் தின்சா (89) உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலமானார். இவர் சில உடல்நல பிரச்சினைகள் காரணமாக மொகாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மரணம் அடைந்தார்.

இவர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசாங்கத்தில் விளையாட்டு, உரம் மற்றும் ரசாயன துறைகளுக்கான அமைச்சராக பணியாற்றினார். மேலும் அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.