அதிமுக கட்சியில் செங்கோட்டையன் நீக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து ஏராளமான நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 300 பேர் ராஜினாமா செய்த 2000 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து விலகினர். இதைத்தொடர்ந்து தற்போது கோபியில் உள்ள அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதைத்தொடர்ந்து தற்போது செங்கோட்டையன் ஆதரவாளர்கள் ஆன முன்னாள் எம்பி சத்திய பாமா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை மேல் இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுக கட்சியில் இருந்து விலகிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார கூட்டத்திற்கு செல்லும் போதும் அதிமுக மீண்டும் ஒன்று சேர வேண்டும் என நிர்வாகிகள் கோஷம் எழுப்பி வருவதால் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அதிமுகவில் விலகி சென்றவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் அப்போதுதான் அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும் செங்கோட்டையன் கூறியதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.
