ஒரிஷாவில் பிஜு ஜனதா தள கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஜார்ஜ் டிர்கி (வயது 67) இன்று (செப்டம்பர் 20) காலமானார்.
கடந்த மூன்று மாதங்களாக உடல்நலக்குறைவால், புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி, இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரின் மறைவு, ஒரிஷா அரசியலிலும் பழங்குடியினர் சமூகத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்ஜ் டிர்கி, பழங்குடியினரின் உரிமைக்காக தீவிரமாக குரல் கொடுத்தவர். மாநில சட்டப்பேரவையில் 4 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காக பணி செய்தவர்.
அவரது சமூக சேவைகளும், அரசியல் அனுபவமும் ஒரிஷா மக்களின் மனதில் நீங்கா நினைவாக இருக்கும் என பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
