அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான நத்தம் விஸ்வநாதன், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அந்தத் தனியார் மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பிற்கு ரத்த அழுத்தமே (Blood Pressure) காரணம் என்று முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
