தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்க உள்ளார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பதவி ஏற்பு விழா தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவைகள் ஆதரவு கொடுத்ததால் பெரும்பான்மை 120 ஆக உயர்ந்தது. இதன் காரணமாக ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு விஜய்க்கு அழைப்பு விடுத்த நிலையில் இன்று நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டுள்ள நிலையில் நடிகர் விஜயுடன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கிறார்கள். மேலும் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் ஒழிக்கப்பட்டு மூன்றாவதாக தமிழ் தாய் பாடல் பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் தற்போது நடிகர் விஜய்க்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் தமிழக அரசு நிகழ்ச்சிகளில் வழக்கமாக தமிழ் தாய் பாடலுடனே நிகழ்ச்சிகள் தொடங்கும் நிலையில் இன்று முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
