சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று சவரனுக்கு 120 வரையில் அதிகரித்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 74120 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9265 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 10107 ரூபாய்க்கும், ஒரு சவரன் 80856 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 122 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 122000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.