தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. தற்போது புயல் கரையை கடக்க தொடங்கியது. இந்த நிலையில் வேளச்சேரியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.