சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எஃப்ஐஆர் லீக் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இது பற்றி அவர் கூறும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக எஃப் ஐ ஆர் லீக் ஆகி இருக்கலாம் எனவும் இது பற்றி  விசாரணை நடைபெறுகிறது என்றும் கூறினார்.

அதன் பிறகு சம்பவம் நடைபெறும் போது குற்றவாளியின் செல் போன் ஏரோபிளேன் மோடில் இருந்தது. இதன் காரணமாக ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி வழக்கில் சார் என்று ஒருவர் கிடையாது. இது பற்றி பரவும் தகவல்கள் பொய்யானது. குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு தக்க தண்டனை வழங்கப்படும். மேலும் இந்த வழக்கில் ஒருவர் மட்டும்தான் குற்றவாளி என்று கூறியுள்ளார்.