
பள்ளி மாணவிகளிடம் ஒழுக்கக்கேடாக நடக்கும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணியில் இருந்து உடனடியாக நீக்கலாம் என தனியார் பள்ளிகளின் இயக்குநர் பழனிச்சாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், கட்டாய பணி ஓய்வு, பணி நீக்கம் செய்ய வேண்டும். அனைத்து பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.