தமிழகத்தில் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டது. பொதுவாக இரண்டு மாதங்கள் முடிவடைந்த பிறகு ஜூன் மாதம் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்ற செய்திகள் வெளியான நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதன்படி கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.