
தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் மன்னார் வளைகுடாவில் பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.