
யுஜிசி மூலம் மாநில பல்கலைக்கழகங்களை ஒன்றிய அரசு கைப்பற்ற முயற்சி செய்கிறது. அடிப்படை கல்வி முதல் உயர் கல்வி வரை பல்வேறு இடைஞ்சல்களை ஒன்றிய அரசு கொடுக்கிறது. யுஜிசி புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும். மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் யுஜிசி-ன் புதிய விதிமுறைகள் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே கல்வி துறையில் முழு உரிமை உள்ளது என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.