
ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்த முடிந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 145 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில் பாஜக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட 212 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதன்பிறகு காங்கிரஸ் கூட்டணி 68 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இதன் காரணமாக மகராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றியை உறுதி செய்துள்ளது.