சென்னை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2024 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை  வெளியிட்டார். சென்னையில் மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்கப்பட்டுள்ளது என இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கூட்டாட்சி மொழிகளுக்கு உரிய அங்கீகாரம் உள்ளிட்ட 133 வாக்குறுதிகள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அதில், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு பதில் மாற்றுத் தேர்வு முறை கொண்டு வரப்படும்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் கூட்ட வலியுறுத்துவோம். மகளிர் உரிமைத் தொகையாக ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 3000 வழங்கமத்திய  அரசை அதிமுக வலியுறுத்தும். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் ஈழத் தமிழர்களை உட்படுத்த வலியுறுத்தப்படும். நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குற்ற வழக்கு சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிடவலியுறுத்தல். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். உயர் நீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம். ஆளுநர் பதவியை நியமிக்கும் போது மாநில அரசின் கருத்துக்களை கேட்க நடவடிக்கை. நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தப்படும். 100 நாள் வேலை திட்ட நாட்களை 150 நாட்களாக உயர்த்தி தின ஊதியத்தை ரூ 450 ஆக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெட்ரோல், டீசல் விலை நிர்ணய முறை சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்த வலியுறுத்தப்படும். இருசக்கர வாகனங்களுக்கு தனிப்பாதை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை. விவசாயிகளுக்கு மாதம் ரூபாய் 5000 ஓய்வூதியம் கொண்டு வர வேண்டும். நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை.