
ஜம்மு & காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு பதற்ற சூழ்நிலையை மையமாகக் கொண்டு, மாநில முதல்வர் திடீரென வெளியிட்ட அறிவிப்பில், “பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்” எனக் கூறியுள்ளார். எல்லை பகுதிகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், பாதுகாப்பு அம்சமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்புப் படைகள் முழுமையாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், முக்கிய இடங்களில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.