நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 9-12 ஆம் தேதி வரையிலான 4 நாட்களில் பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுவதை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பொங்கல் தொகுப்பில் ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசியை விநியோகிக்க கூடாது. இரண்டு 500 ரூபாய் தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும். இதற்கிடையில் சில்லறை மாற்றி தரக்கூடாது. கரும்பின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது. 6 அடி (அல்லது) அதற்கு மேல் உள்ள கரும்பு மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.