தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில் அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதன்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறையாகும்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக ஜனவரி 13ஆம் தேதி வெள்ளிக்கிழமையும், பொங்கலை முடித்துவிட்டு மீண்டும் திரும்ப ஏதுவாக ஜனவரி 18ஆம் தேதி புதன்கிழமையும் சிறப்பு கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆகவே இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.