
கடலூர் மாவட்டத்தில் NLC-க்கு எதிராக நேற்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பேருந்து மீது தாக்குதல், டயர் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், பாதுகாப்பு நலன் கருதி நேற்று இரவு முதல் தற்போதுவரை நகர பேருந்து சேவை இயக்கப்படவில்லை. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர். வெளியூர், வேலைகளுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்