நாடு முழுவதும் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த E20 பெட்ரோல் காரணமாக வாகன எஞ்சின் பாதிக்கப்படுவதாகவும், எத்தனால் கலக்கப்படாத பெட்ரோலும் வாகன ஓட்டிகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த மனு விசாரணையின் போது அரசாங்கம் இது தொடர்பாகவே ஏற்கனவே அனைத்து பரிசீலனைகளையும் பிரச்சனைகளையும் முடித்து விட்டதாகவும் வாதிடப்பட்டது. மேலும் இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.