தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா. இவர் ஒரு கொலை வழக்கில் சிக்கிய நிலையில் தற்போது நீதிமன்றம் அவரை விடுதலை செய்த தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2012 ஆம் ஆண்டு பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோவிலில் நாகமுத்து என்பவர் பூசாரி ஆக இருந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் இறப்பதற்கு முன்பாக கடிதம் எழுதியிருந்தார்.

அதில் தன்னுடைய மரணத்திற்கு ஓ. ராஜா உள்ளிட்டோர் தான் காரணம் என்று எழுதியிருந்தார். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் ‌ அவர் இந்த வழக்கிலிருந்து ஓ. ராஜா உள்ளிட்ட ‌6 பேரை  விடுதலை செய்து  உத்தரவிட்டுள்ளார்.