
புற்றுநோய், அரிதான நோய்களுக்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதனை ஏற்றுக் கொண்டு இந்த அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல செயற்கைகோள் ஏவும் சேவைகள் அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.