மதுரையில் பிரபல ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் மீது போலீஸ் என்கவுன்ட்டர் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனக்கன்குளம் மலை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் பிரபல ரவுடி. கடந்த 22 ஆம் தேதி காளீஸ்வரனை 4மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.

ரவுடி காளீஸ்வரன் கொலையில் மற்றொரு ரவுடியான சுபாஷ் சந்திரபோசை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.அவர் மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் காட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை பிடிக்க முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் சுபாஷ் சந்திரபோசை என்கவுண்டர் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.