தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்பாபு (72). தமிழை தாண்டி பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ள சரத்பாபு சில காலங்களாக உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நடிகர் ரஜினியுடன் சேர்ந்து முத்து மற்றும் அண்ணாமலை போன்ற படங்களில் நடிகர் சரத்பாபு நடித்துள்ளார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு என்ற உடல் நல குறைவினால் மரணம் அடைந்துள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.