பிரபல நடிகர் மாரி முத்து (57) இன்று காலை சீரியல் டப்பிங் பணியின்போதே மாரடைப்பால் காலமானார். புலிவால், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர். பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் எதிர் நீச்சல் சீரியலில் நடித்து பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்