​சென்னை: பிரபல மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் (70), இன்று (பிப். 3) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார்.

கடந்த 1985-ஆம் ஆண்டு வெளியான ‘ஜானகீய கோதாதி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்த இவர், தனது தனித்துவமான இசைப் பாணியால் குறுகிய காலத்திலேயே பெரும் புகழ்பெற்றார். தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் வங்கம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவருக்கு, திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இவரது மறைவு தென்னிந்தியத் திரை இசைத்துறைக்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.