இந்திய கிரிக்கெட் வாரியமன பிசிசிஐ தலைவராக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில் இன்று நடைபெற்ற வருடாந்திர ஆண்டு கூட்டத்தின் போது அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. 70 வயதை எட்டிய நிலையில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மிதுன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஆனார்.
இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி, சென்னை ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். அதன் பிறகு ரஞ்சி டிராபியில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இவர் கடைசியாக ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக செயல்பட்டார். மேலும் தற்போது பிசிசிஐ புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
