பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) சற்றுமுன் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். கடந்த நவம்பர் 10-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள தர்மேந்திரா, தனது நீண்ட திரைப்படப் பயணத்தில் பல்வேறு உயரிய விருதுகளை வென்றுள்ளார்.
இந்தித் திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரான அவரது மறைவு, இந்தியத் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
