
இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத். இவர் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர். இவரை தற்போது உலக பேட்மிட்டன் கூட்டமைப்பு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி 18 மாதங்களுக்கு அவர் போட்டியிலிருந்து விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஊக்க மருந்து கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. மேலும் அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.