பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி  ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கையெழுத்திட்டுள்ளனர். எந்த தொகுதி என்பது பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. பாஜக கூட்டணியில் ஏற்கனவே பாமகவுக்கு 10, அமமுகவுக்கு 2, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.