அதிமுக கூட்டணியில் 5 மக்களவைத் தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உடன் எல்.கே சுதீஸ் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் வந்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் வந்த பிரேமலதாவுக்கு கே.பி முனுசாமி தலைமையில் மூத்த தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் தொகுதி உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். திருவள்ளுர், கடலூர், விருதுநகர், மத்திய சென்னை, தஞ்சை ஆகிய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர விடுதியில் அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.